coming soon
Ramanusa Nootrandhadhi (10)
இராமாநுச நூற்றந்தாதி - 18
எய்தற்கரியமறைகளை * ஆயிரமின் தமிழால்
செய்தற்குலகில்வருஞ் சடகோபனை* சிந்தையுள்ளே
பெய்தற்கிசையும்பெரியவர்சீரை யுயிர்களெல்லாம்
உய்தற்குதவும்* இராமாநுசனெம்முறு துணையே
வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபனையே வாழ்த்தும் ஸ்ரீமதுரகவிகளின் பக்தரான எம்பெருமானார் நமக்கு உற்றதுணை யென்றாராயிற்று. இப்பாட்டில், ஸ்ரீமதுரகவிகள் பெரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டமை நோக்கத்தக்கது. “புவியு மிருவிசும்பும் நின்னகத்த, நீ யென் செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவின்றி, யான் பெரியவன் நீ பெரியை யென்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாயுள்ளு” [பெரிய திருவந்தாதி] என்று பெரிதான பரப்ரஹ்மத்தை உள்ளடக்கின பெரியவரையும் [நம்மாழ்வாரையும்] உள்ளடக்கின பெரியவரிறே மதுரகவிகள்.
எய்தற்கு அரிய மறைகளை | அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை |
இன் தமிழ் ஆயிரத்தால் | இனிய தமிழாலாகிய ஆயிரம் பாசுரங்களினால் |
செய்தற்கு | அருளிச்செய்வதற்காக |
உலகில் வரும் | இவ்வுலகில் வந்துதித்த |
சடகோபனை | நம்மாழ்வாரை |
சிந்தை உள்ளே |
தமது ஹ்ருதயத்தினுள்ளே |
பெய்தற்கு இசையும் | த்யானிப்பதற்கு இணங்கின |
பெரியவர் | ஸ்ரீ மதுரகவிகளுடைய |
சீரை | ஜ்ஞாநாதி குணங்களை |
உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் | ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளாநிற்கிற |
இராமாநுசன் | எம்பெருமானார் |
எம் உறு துணை | எமக்கு உற்ற துணை |
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்*
பழியைக்கடத்து மிராமாநுசன் புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல்* எனக்கினி யாதும் வருத்தமன்றே
மொழியைக் கடக்கும் | வாய்கொண்டு வருணிக்க முடியாதபடி வாசாமகோசரமான |
பெரு புகழான் | பெரிய புகழையுடையவரும் |
முக்குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும் | கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படுகுழியைக்கடந்திருப்பவரும் |
நம் | நமக்கு நாதருமான |
கூரத்து ஆழ்வான் | கூரத்தாழ்வானுடைய |
சரண் | திருவடிகளை |
கூடியபின் | நான் ஆச்ரயித்த பின்பு |
பழியைக் கடத்தும் | ஸர்வபாப நிவர்த்தகரான |
இராமாநுசன் | எம்பெருமானாருடைய |
புகழ் பாடி | நற்குணங்களைப்பாடி |
அல்லாவழியைக் கடத்தல் | ஸ்வரூபத்திற்குச் சேராத தீயவழிகளைத் தப்பிப் பிழைக்கயானது |
எனக்கு | அடியேனுக்கு |
இனி | இனிமேலுள்ள காலமெல்லாம் |
யாதும் வருத்தம் அன்று | ஈஷத்தும் ப்ராயஸ ஸாத்யமன்றுல் [எளிதேயாம்] |
நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினும் ஆழ்வானுடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம். நம் தர்சநத்துக்கு மஹாத்ரோஹியான நாலூரானுக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத்ஸந்நிதியிலே ப்ரார்த்திக்கவேண்டியிருக்க, பேரருளாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம்செய்து கண்தெரியும்படி வரம் வேண்டிக்கொள்ளீர் என்ற ஸவாசார்ய நியமநத்தையும் அதிக்ரமித்து “நான் பெற்றபேறு நாலூரானும் பெறவேணும்” என்று வரம் வேண்டிக்கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானுடைய புகழை நாம் என்சொல்வோம்! “மொழியைக் கடக்கும் பெரும்புகழான்” என்று சொல்லுவது தவிர வேறுவாசகமில்லைகாணும்.
[வஞ்சமுக்குறும்பாமித்யாதி] கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்ற இம்மூன்று அஹங்காரங்கள் மிகக்கோடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது; இவற்றைக் கடந்தவர் என்னும் ஏற்றம் ஆழ்வானொருவர்க்கே அஸாதாரணமென்பதாக எம்பெருமானார் காலத்திலேயே ப்ரஸித்தமாயிற்று. திருவாய்மொழியில் “பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரத்தில் ஆழ்வான் விஷயமாக அருளிச்செய்யப்பட்டதொரு ஐதீஹ்யம் குறிக்கொள்ளத்தக்கதாகும். மற்றும் பல இதிஹாஸங்களும் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
இராமாநுச நூற்றந்தாதி - 4
என்னைப்புவியிலொருபொருளாக்கி* மருள் சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து* ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த விராமாநுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்க வைத்தான்* எனக்கேதுஞ்சிதைவில்லையே.
இராமாநுச நூற்றந்தாதி - 4
என்னைப்புவியிலொருபொருளாக்கி* மருள் சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து* ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த விராமாநுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்க வைத்தான்* எனக்கேதுஞ்சிதைவில்லையே.
ஊழி முதல்வனையே காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம்பெருமானையே
பன்ன (எல்லாரும் விவேகித்து) அநு ஸந்திக்கும்படி
பணித்த (ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த
பரன் இநாமாநுசன் ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்
புவியில் இந்த பூமியிலே
என்னை ஒரு பொருள் ஆக்கி (அபார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரற நீக்கி
பாதமும் தமது திருவடிகளையும்
என் சென்னி எனது தலையிலே
தரிக்க வைத்தான் நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹாப்ரஸாதம் பெற்றேனான பின்பு)
எனக்கு அடியேனுக்கு
ஏதும் சிதைவு இல்லை எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.
* * * எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒரு நாளும் எவ்விதமான ஹாநியையும் அடையமாட்டேன் என்கிறார். பதார்த்த கோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானனர்; இப்பேறு பெற்ற எனக்கு இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.
மருள் சுரந்த – அஜ்ஞாநத்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாற்; ஊழிமுதல்வனனயே பன்னப்பணித்த – ஊழிமுதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச் செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படியாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன் – பிரளயகாலத்தில் முழுமுதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்…. (4)
பேர் இயல் நெஞ்சே!
|
மிகவும் கம்பீரமான மனமே!
|
உன்னை அடி பணிந்தேன்
|
உன்னை வணங்குகின்றேன்; (என்னை வணங்குவது எந்தற்காக என்னில்;)
|
பேய் பிறவி
|
ஆஸூரப் பிறப்பை யுடையவர்களான
|
பூரியரோடு உள்ள
|
நீசர்களோடு (எனக்கு) இருந்த
|
சுற்றம்
|
உறவை
|
புலர்த்தி
|
போக்கடித்து
|
பொருவு அரு சீர்
|
ஒப்பற்ற குணங்களையுடையவரும்
|
ஆரியன்
|
சிறந்த அநுஷ்டானமுடையவரும்
|
செம்மை
|
(ஆச்ரிதரோடு) ருஜுவாகப் ப்ரிமாறுந்தன்மை வாய்ந்தவருமான
|
இராமானுச முனிக்கு
|
எம்பெருமானார் திறத்தில்
|
அன்பு செய்யும் சீரிய பேறு உடையார்
|
பக்தி பண்ணுவதையே பரம புருஷார்த்தமாக வுடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய
|
அடிக்கீழ்
|
திருவடிகளின் கீழே
|
என்னை
|
(பரம நீசனாயிருந்த) என்னை
|
சேர்த்ததற்கே
|
கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற்காகவே (உன்னை அடி பணிந்தேன்)
|
கள் ஆர் பொழில் தென் அரங்கன்
|
தேன் நிறைந்த சோலைகளையுடைய தென் திருவரங்கத்திலே பள்ளிகொள்ளும் பெருமானுடைய
|
கமலம் பதங்கள்
|
தாமரை போன்ற திருவடிகளை
|
நெஞ்சில் கொள்ளா
|
தமது நெஞ்சிலேவையாத
|
மனிசரை நீங்கி
|
மனிதர்களை விட்டொழித்து
|
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
|
திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியையுடையனான
|
இராமாநுசன்
|
எம்பெருமானாருடைய
|
மிக்க சீலம் அல்லால்
|
சிறந்த சீலகுணத்தைத் தவிர
|
ஒன்று
|
வேறொன்றையும்
|
என் நெஞ்சு உள்ளாது
|
எனது நெஞ்சானது நினைக்கமாட்டாது
|
(இவ்வாறாக)
|
|
எனக்கு உற்ற பேர் இயல்வு
|
எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
|
ஒன்று அறியேன்
|
ஒரு காரணத்தையும் அறிகின்றிலே
|
பாமன்னுமாற னடிபணிந் துய்ந்தவன்* பல்கலையோர்
தாம்மன்ன வந்த விராமாநுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ* நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே.
பாமன்னுமாற னடிபணிந் துய்ந்தவன்* பல்கலையோர்
தாம்மன்ன வந்த விராமாநுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ* நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே.
ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திருவஷ்டாக்ஷரம். அதனுடைய பரம தாத்பர்யமாயும், ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாயும், ஸ்ரீமதுரகவிகளுடைய உக்தியாலும் அநுஷ்டாகத்தாலும் ப்ரகாசிதமாயும், நம் பூருவாசார்யார்களின் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும், சேதநர்களனைவர்க்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும், பரம ரஹஸ்யார்த்தமாயு மிருப்பது சரம பர்வ நிஷ்டை. அஃதிருக்கும்படியைத் திருவரங்கத்தமுதனார்க்கு எம்பெருமானார் தமது நிர்ஹேதுக க்ருபையினாலே கூரத்தாழ்வான் திருவடிகளிலே இவரை ஆச்ரயிப்பித்தருளி இவர் முகமாக உபதேசித்தருளினார். அங்கனம் உபதேச ப்ராப்தமான அந்தச் சீரிய பொருளை இவ்வமுதனார் தாம் அநவரத பாவநை பண்ணி எம்பெருமானார் திருவடிகளை இடைவிடாது ஸெவித்துக்கொண்டு போந்தராய் அவருடைய திருக்கல்யாண குணங்களைத் தமது பத்திப் பெருங்காதலுக்குப் போக்குவீடாகப் பேசி அநுபவித்தே தீரவேண்டும்படியான நிலமை தமக்கு உண்டானமையாலும், சரமபர்வநிஷ்டையே சீரியதென்கிற பரமார்த்தத்தச் சேதநர்கட்கு எளிதில் உணர்த்த வேணுமென்கிற க்ருபாமூலகமான கருத்தினாலும் தாம் எம்பெருமானாருடைய திவ்யகுண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியாகப் பேசுகிற பாசுரங்களாலே அவருடைய வைபவங்களை அனனவர்க்கும் வெளியிடா நின்றுகொண்டு முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கே அற்றுத்தீர்ந்த மதுரகவிகள் தமது நிஷ்டையைக்கூறும் முகத்தாலும் பிறர்க்கு உபதேசிக்கும் முகத்தாலும் உஜ்ஜீவநத்துக்கு உபயுக்த்தமான அர்த்தத்தை லோகத்திலே வெளியிட்டருளினதுபோல, இவர் தாமும் அவ்வகைகளாலே ஆசார்யாபிமாநநிஷ்டர்க்கு அறிந்து கொள்ளத்தக்க அர்த்தங்களையெல்லாம் மிக்க சுருக்கமும் மிக்க விரிவுமின்றி நூற்றெட்டு பாசுரங்கள் கொண்ட இத்திவ்ய ப்ரபந்த முகத்தால் அருளிச்செய்கிறார்.
நெஞ்சே! |
ஓ மனமே! |
பூ மன்னு மாது | தாமரைப்பூவில் பொருத்த முடையளாயிருந்த பிரட்டி |
பொருந்திய மார்பன் | (அப்பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையையுடைய திருமார்பையுடையனான பெருமாளுடைய |
புகழ் மலில்ந்த பா | திருக்கல்யாண குணங்கள் நிறைந்த தமிழ் பாசுரங்களிலே |
மன்னு மாறன் | ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய |
அடி | திருவடிகளை |
பணிந்து | ஆச்ரயித்து |
உய்ந்தவன் |
உஜ்ஜீவித்தவரும் |
பல் கலையோர் தாம் மன்ன வந்த | பலபல சஸ்திரங்களை ஓதின மஹான்கள் நிலைபெறும்படி (இவ்வுலகில்) வந்தவதரித்தவருமான |
இராமாநுசன் |
எம்பெருமானாருடைய |
சரண அரவிந்தம் | திருவடித் தாமரைகளை |
நாம் மன்னி வாழ | நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக |
அவன் நாமங்களே | அவ்வெம்பெருமானாரது திருநாமங்களையே |
சொல்லுவோம் | ஸங்கீர்த்தநம் பண்ணுவோம் |
தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப்பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைத்தொழுது ஸத்தை பெற்றவராயும், பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யங்கள்கொண்டு தடுமாறுகின்றவர்களை ஒரு நிச்சயஞானத்திலே நிலைநிறுத்தி வாழ்விக்கவந் தவதரித்தவராயுமிருக்கிற எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று;
பல்கலையோர் தாம்மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக்கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம். எம்பெருமானாருடைய சரணாரவிந்த ப்ராப்திக்கு ஸாதகம் = அவருடைய திருநாமஸங்கீர்த்தநமேயாம் என்பது இப்பாசுரத்தில் வெளியாயிற்று.
சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.
அறு சமயம் | அப்ராமாணிகங்களான அறுமதங்களையும் |
வெல்லும் | கண்டித்தருளின |
பரம | ஆரியரான |
இராமானுச | எம்பெருமானாரே! |
உனது அடி போதுக்கு | தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே |
தொண்டு செய்யும் | வாசிக கைங்கர்யம் பண்ணுகிற |
நல் அன்பர் | பரம பக்தர்கள் |
சொல்லின் தொகை கொண்டு | சப்த ராசிகளைக் கொண்டு |
ஏத்தும் | துதிக்கிற |
உன் நாமம் எல்லாம் | தேவரீருடைய திருநாமங்களெல்லாம் |
என்தன் நாவிலுள்ளே | எனது நாவிலே |
அல்லும் பகலும் |
அஹோராத்ரமும் |
அமரும்படி | பொருந்தியிருக்கும் படி |
நல்கு | க்ருபைசெய்தருள வேணும் |
இதுவே என் விண்ணப்பம் | இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம். |
[இம்மூன்று தனியன்களே ஸகல திவ்ய தேசங்களிலும் வழங்கு மவை; மற்றொரு தனியன் மேனாட்டில் அநுஸந்திக்கப் படுகிறதாம்;]
இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி யிராமானுசமுனி தாளினைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமு தேங்குமன்பால்
இயம்புங் கலித்துறையந்தாதி யோதவிசை நெஞ்சமே.
நெஞ்சமே | மனமே |
நயம் தரு | விஷயங்களால் தரப்படுகிற |
பேர் இன்பம் எல்லாம் | சிற்றின்பங்கள் யாவும் |
பழுது என்று | வ்யர்த்தங்களென்று (அவற்றை விட்டொழித்து) |
நண்ணினர் பால் | தம்மை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் |
சயம் தரு கீர்த்தி | ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான |
இராமானுச முனி | எம்பெருமானாருடைய |
தாள் இணை மேல் | இரண்டு திருவடிகள் விஷயமாக |
உயர்ந்த குணத்து திருவரங்கத்து அமுது | சிறந்த குணசாலியான திருவரங்கத் தமுதனார் |
ஓங்கும் அன்பால் | கொழுந்து விட்டோங்கிய பக்தியினாலே |
இயம்பும் | அருளிச்செய்த |
கலித்துறை அந்தாதி | கட்டளக் கலித்துறையினாலமந்த நூற்றந்தாதியை |
ஓத | அத்யாபகம் செய்ய |
இசை | ஸம்மதித்திருக்கக் கடவை |
விஷயாந்தரங்களின் அனுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் யாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து அவற்றில் நசையற்றுத் தம்மைவந்து அடி பணிகின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய் இப்பெரும்புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானார் விஷயமாக, பகவத் பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனார் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய பிரபந்தத்தை ஓதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்றார்.
நயம் = விஷயாந்தரங்கள். “நாணாமை நள்ளேன் நயம்” (முதல் திருவந்தாதி) என்ற விடத்து, நயம் என்பதற்கு விஷயாந்தரங்களென்று பொருள் அருளிச்செய்யப்பட்டிருத்தல் காண்க. பேரின்பம் – சிற்றின்ப மென்னவேண்டுமிடத்து பேரின்பமென்றது விபரீதலக்ஷணை.
வேதப்பிரான் பட்டர் அருளிச்செய்தவை.
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.
முன்னை வினை | முன்னே செய்த பாபங்களெல்லாம் |
அகல | ஒழிவதற்காக |
மூங்கில் குடி அமுதன் | “மூங்கிற்குடி” என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய |
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் | பொன்போல் அழகிய பாதாரவிந்தங்களிரண்டையும் |
என்னுடைய சென்னிக்கு | எனது தலைக்கு |
அணி ஆக | ஆபரணமாக |
சேர்த்தினேன் |
பொருந்தவைத்துக் கொண்டேன் |
யான் |
இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன் |
தென் புலத்தார்க்கு | தெற்கு திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு |
என்னுக்கு | எதுக்காக |
கடவு உடையேன் |
ப்ராப்தி யுடையேன்? |
மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை; என்றாயிற்று.
“முன்னை வினையகலச் சேர்த்தினேன்” என் இயையும். [மூங்கிற்குடி] வேயர்குலம், ஆஸூரிகுலம், கூரகுலம் என்பன போல மூங்கிற்குடி யென்று ஒரு குலமுண்டாம். கமலப் போது = தாமரைப்பூ, அணி – ஆபரணம். சேர்த்தினேன் = சேர்த்தேன் என்றபடி: இன்--சாரியை.
என்னுக்கு+கடவுடையேன் = என்னுக்கடவுடையேன்; (கடைக்குறை) கெடுதல் விகாரப் புணர்ச்சி. என்னுக்கு = எதுக்காக என்கை; “என்னுக்கவனை விட்டிங்கு வந்தாய்” என்றார் குலசேகரப் பெருமாளும். [கடவுடையேன்.] கடவு = ப்ராப்தி; அதாவது – உரிமை.
இவ்வமுதனார், ஒரு பங்குனித்திங்களில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் மூங்கிற்குடியில் திருவவதரித்து, திருவரங்கம் பெரியகோயிலில் இருந்ததுவே காரணமாகப் பெரியகோயில் நம்பி என்று ப்ரஸித்தராய் வாழ்ந்துவந்தார்.
[அஷ்டப்பிரபந்தம் செய்தருளினவரும் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்து ஊய்ந்தவருமான “பிள்ளைப்பெருமாளையங்கார்” என்பவர்க்கு இவர் திருத்தகப்பனார் என்று சிலரும், பாட்டனார் என்று சிலரும் சொல்லுவர்.]
இவர் ஸகல சாஸ்த்ரங்களையும் அதிகரித்து மஹா நிபுணராய், தமக்குக் குலக்ரமமாகக் கிடைத்த ஸந்நிதி புரோஹித வ்ருத்தியையும் புராணபடந கைங்கர்யத்தையும் பெற்று மிகவும் ராஜஸராய்ச் செருக்குடன் வாழ்ந்துவரும் நாளிலே, உலகங்களை வாழ்விக்கத் திருவனந்தாழ்வானது திருவவதாரமாய்த் திருவவதரித்த எம்பெருமானார் தமது இயற்கையின்னருளாலே இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளப்பற்றிக் கூரத்தாழ்வானுக்கு நியமிக்க, ஆழ்வானும் இவரை அநுவர்த்தித்து ஞானச்சுடர் கொளுத்தி எம்பெருமானார் திருவடிக்கீழ்க் கொணர்ந்து சேர்க்க, எம்பெருமானாரும் அவரைக் குளிரக் கடாக்ஷித்தருளி ஆழ்வான் பக்கல் ஆச்ரயிக்கும்படி நியமிக்க, அப்படியே அவரும் ஆழ்வானை ஆச்ரயித்துத் தத்வஹித புருஷார்த்தங்களை ஐயந்திரிபறத் தெளிந்து ஆத்மஆத்மீயங்களை அந்த ஆசார்யன் திருவடிகளிலே ஸமர்ப்பித்துப் பரம ப்ரவணராயிருந்தார். இப்படியிருக்கையில் ஸ்வாசார்யருடைய உகப்புக்கு உறுப்பாகத் தமக்கு ப்ராசார்யரான எம்பெருமானார் விஷயமாக ஒன்றிரண்டு பிரபந்தங்களைச் செய்து அவற்றை எம்பெருமானார் ஸந்நிதியிற் கொணர்ந்துவைக்க, எம்பெருமானாரும் அவற்றை அவிழ்த்துக் கடாக்ஷிக்க, அவை தமது திருவுள்ளத்துக்கு இசைந்திராமையாலே அவற்றைக் கிழித்தெறிந்துவிட்டு அவரை நோக்கி, “நம்மைப் பற்றிப் பிரபந்தம் பாடவிருப்பம் உமக்கிருக்குமாகில், ஆழ்வார்களிடத்தும் உகந்தருளின நிலங்களிடத்தும் நமது ப்ராவண்யம் தோற்றுமாறு ஒரு பிரபந்தம் செய்யும்” என்று நியமித்தருள, இவரும் அப்படியே செய்கிறேனென்று அந்த நியமகத்தை சிரஸ்ரவஹித்து எம்பெருமானார்க்கு ஆழ்வார்களிடத்திலும் திவ்ய தேசங்களிடத்திலுமுள்ள அன்பை நன்கு விளங்கவைத்து இந்தப் பிரபந்தத்தை அருளிச்செய்து எம்பெருமானார் ஸந்நிதியிலேவந்து வணங்கி “இதைக் கேட்டருளவேணும்” என்று பிரார்த்தித்து அநுமதி பெற்றுக் கூரத்தாழ்வான் முதலானோர் பேரோலக்கமாக இருக்கிற அங்குத்தானே இந்தப் பிரபந்தத்தை விண்ணப்பம் செய்ய, எம்பெருமானார் மற்றை முதலிகளோடும் திருச்செவி சார்த்தித் தலைதுலுக்கிப் போரவுகந்தருளி, தம்திருவடிகளில் ஸம்பந்தமுடையோர்க்கெல்லாம் அந்த பிரபந்தத்தை அன்று தொடங்கி என்றும் நித்யாநுஸந்தேயமாம்படி கற்பித்தருளியதுந் தவிர, அவரது வாக்கு அமுதவாக்காயிருந்தமையால் அவர்க்கு அமுதன் என்ற திருநாமத்தையும் பிரஸாதித்தருளி மிகவும் கடாக்ஷித்தருளினார். அகையால் அதுமுதல் “பெரியகோயில் நம்பி” என்ற திருநாமம் மாறித் திருவரங்கத்தமுதனார் என்ற திருநாமம் வழங்கத் தொடங்கிற்று. இப்பிரபந்தத்திற்கு ப்ரபந்ந காயத்ரி என்ற திருநாமமும் அன்றேதொடங்கி நிகழலாயிற்று.
இந்த விருத்தாந்தம் சிறிது மாறுபாடாகவும் சொல்லப்படுவதுண்டு; எங்கனெ யெனின்;- அமுதனார் எம்பெருமானாருடைய நியமனம் பெற்று இப்பிரபந்தம் இட்டருள்வதாக அடையவளைந்தான் திருமதிலுக்கு இவ்வருகேயிருந்த ஒரு தென்னஞ்சோலைத் திருமண்டபத்தில் வீற்றிருந்து பட்டோலைக் கொண்டிருக்கும் போது, அவ்வளவில் எம்பெருமானார் அழகியமனவாளனது நியமனத்தினால் ஆழ்வான், ஆண்டான், எம்பார் முதலிய அந்தரங்கசிஷ்யர்களோடு அவ்விடத்தேயெழுந்தருள அப்போது “செழுந்திரைப்பாற்கடல்” என்ற நூற்றைந்தாம்பாசுரம் தலைக்கட்டி, “இருப்பிடம் வைகுந்தம்” என்ற பாசுரம் எழுதவேண்டிய தருணமாயிருந்ததென்றும், அது முதலான மூன்று பாசுரங்களும் எம்பெருமானார் திருமுன்பே தொடுக்கப்பட்டன வென்றும், பிறகு அரங்கேற்றியானபின் “இந்த விசேஷத்துக்கு ஸ்மாரகமாக இப்பிரபந்தத்திற்கு மாத்திரம் சாற்றுப் பாசுரங்கள் மூன்றாயிருக்கவேணும்” என்று ஆழ்வான் நியமித்தருளினாரென்றும், ஆனதுபற்றியே மற்றைப் பிரபந்தங்கட்கு இரண்டு பாசுரம் சாற்றாயிருப்பதுபோலல்லாமல் இதற்கு மூன்று பாசுரம் சாற்றாக ஸம்ப்ரதாயம் நிகழ்கின்றதென்றும்