இராமாநுச நூற்றந்தாதி - 3
பேரியல்நெஞ்சே அடிபணிந்தே னுன்னை* பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்தி* பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை யிராமாநுசமுனிக் கன்புசெய்யும்
சீரியபேறுடையார்* அடிக்கீழ்ழென்னைச் சேர்ந்ததற்கே.
இராமாநுச நூற்றந்தாதி - 3
பேரியல்நெஞ்சே அடிபணிந்தே னுன்னை* பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்தி* பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை யிராமாநுசமுனிக் கன்புசெய்யும்
சீரியபேறுடையார்* அடிக்கீழ்ழென்னைச் சேர்ந்ததற்கே.
பேர் இயல் நெஞ்சே!
|
மிகவும் கம்பீரமான மனமே!
|
உன்னை அடி பணிந்தேன்
|
உன்னை வணங்குகின்றேன்; (என்னை வணங்குவது எந்தற்காக என்னில்;)
|
பேய் பிறவி
|
ஆஸூரப் பிறப்பை யுடையவர்களான
|
பூரியரோடு உள்ள
|
நீசர்களோடு (எனக்கு) இருந்த
|
சுற்றம்
|
உறவை
|
புலர்த்தி
|
போக்கடித்து
|
பொருவு அரு சீர்
|
ஒப்பற்ற குணங்களையுடையவரும்
|
ஆரியன்
|
சிறந்த அநுஷ்டானமுடையவரும்
|
செம்மை
|
(ஆச்ரிதரோடு) ருஜுவாகப் ப்ரிமாறுந்தன்மை வாய்ந்தவருமான
|
இராமானுச முனிக்கு
|
எம்பெருமானார் திறத்தில்
|
அன்பு செய்யும் சீரிய பேறு உடையார்
|
பக்தி பண்ணுவதையே பரம புருஷார்த்தமாக வுடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய
|
அடிக்கீழ்
|
திருவடிகளின் கீழே
|
என்னை
|
(பரம நீசனாயிருந்த) என்னை
|
சேர்த்ததற்கே
|
கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற்காகவே (உன்னை அடி பணிந்தேன்)
|
பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம்பெருமானாருடடய திருவடிகளில் ப்ராவண்யமாகிற பரமபுருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடடய திருவடிகளின் கீழே என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே! இப்பெருநன்றிபுரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? “தலையில்லா கைம்மாறிலேனே” என்றாற்போலே உன்னைத் தலையால் வணங்குவது தவிர வேறொறு கைம்மாறு நான் செய்கிகில்லேன் என்றாரயிற்று. பூரியர் = இழிப்பிறப்பாளர். புலர்த்துதல் – உலரச் செய்தல்; அதாவது போக்கடித்தல். பொருவு – ஒப்பு.
“இராமாநுசனடிக் கன்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவக்ஷிக்கிறார் என்றாலும், கூரத்தாழ்வானை விசேஷித்துக் கருதுகின்றாரென்றலும் ஒக்கும்.