இராமாநுச நூற்றந்தாதி - 2
கள்ளார்பொழில் தென்னரங்கன்* கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு* ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.
இராமாநுச நூற்றந்தாதி - 2
கள்ளார்பொழில் தென்னரங்கன்* கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு* ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.
கள் ஆர் பொழில் தென் அரங்கன்
|
தேன் நிறைந்த சோலைகளையுடைய தென் திருவரங்கத்திலே பள்ளிகொள்ளும் பெருமானுடைய
|
கமலம் பதங்கள்
|
தாமரை போன்ற திருவடிகளை
|
நெஞ்சில் கொள்ளா
|
தமது நெஞ்சிலேவையாத
|
மனிசரை நீங்கி
|
மனிதர்களை விட்டொழித்து
|
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
|
திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியையுடையனான
|
இராமாநுசன்
|
எம்பெருமானாருடைய
|
மிக்க சீலம் அல்லால்
|
சிறந்த சீலகுணத்தைத் தவிர
|
ஒன்று
|
வேறொன்றையும்
|
என் நெஞ்சு உள்ளாது
|
எனது நெஞ்சானது நினைக்கமாட்டாது
|
(இவ்வாறாக)
|
|
எனக்கு உற்ற பேர் இயல்வு
|
எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
|
ஒன்று அறியேன்
|
ஒரு காரணத்தையும் அறிகின்றிலே
|
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளோடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளோடு உறவை ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளியே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுண மொன்றையே சிந்தியா நின்றது; இப்படிப்பட்டதொரு பெருந்தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபாகடாக்ஷமேயொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.