இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்
சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.
அறு சமயம் | அப்ராமாணிகங்களான அறுமதங்களையும் |
வெல்லும் | கண்டித்தருளின |
பரம | ஆரியரான |
இராமானுச | எம்பெருமானாரே! |
உனது அடி போதுக்கு | தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே |
தொண்டு செய்யும் | வாசிக கைங்கர்யம் பண்ணுகிற |
நல் அன்பர் | பரம பக்தர்கள் |
சொல்லின் தொகை கொண்டு | சப்த ராசிகளைக் கொண்டு |
ஏத்தும் | துதிக்கிற |
உன் நாமம் எல்லாம் | தேவரீருடைய திருநாமங்களெல்லாம் |
என்தன் நாவிலுள்ளே | எனது நாவிலே |
அல்லும் பகலும் |
அஹோராத்ரமும் |
அமரும்படி | பொருந்தியிருக்கும் படி |
நல்கு | க்ருபைசெய்தருள வேணும் |
இதுவே என் விண்ணப்பம் | இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம். |
[இம்மூன்று தனியன்களே ஸகல திவ்ய தேசங்களிலும் வழங்கு மவை; மற்றொரு தனியன் மேனாட்டில் அநுஸந்திக்கப் படுகிறதாம்;]