{phocadocumentation view=navigation|type=mpcn}
ஸ்ரீ:
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
உபந்யாஸ ஹஸ்த பூஷணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்
Sri. U. Ve. Prathivādi Bhayankaram Annaṅgarāchāryār Swāmy’s Upanyāsams
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal
3. ஸ்ரீமந் நாத முனிகளுக்கும் ஆளவந்தார்க்கும் திவ்ய தேசமெங்கும் திரு நக்ஷத்ரோத்ஸவ பரிபாலனம் நடைபெற்றாலும் திருவவதாரஸ்தலமான காட்டு மன்னார் ஸன்னிதியிலே நடைபெறுவது வெகு விசேஷம். தினப்படி காலை மாலையிரு வேளையிலும் திருவீதிப் புறப்பாடு, பகலில் அலங்காரத் திருமஞ்சனம் ஸேவை சாத்து முறைகள், லோகோத்தாரனமான ததீயாராதனம், இரவு திருவீதிப் புறப்பாட்டின் பிறகு திருவாய்மொழி ஸேவை சாத்துமுறை இத்யாதி வைபவங்கள் விலக்ஷணமாக நடந்தேறுகின்றன. தலத்தின் அழகும் ஸந்நிதியின் ஸந்நிவேசமும் மிகமிக வாய்ப்பானது. நாதமுனிகள் திருநக்ஷத்திரம் ஆனு அனுடம். ஆளவந்தாரின் திருநக்ஷத்திரம் ஆடி உத்தராடம். எழுபத்து நான்கு மதகுகளையுடைய வீராணத்தேரி இத்தலத்தின் அருகிலேயே.
3. Even though the tiru-nakṣatirams of Śriman Nātamunigal and Āḷavandār are celebrated everywhere in divyadesams, the celebrations happening in their place of birth, Kāṭṭu Maṉṉār saṉṉidi, is very special. Daily procession in the streets around the temple (tiruvīdip purappāḍu) in the morning and evening, day-time alaṅgāra sevai and sāttumurai, prasādam for Bhāgavatās (tadīyārādanam), Tiruvāimoḻi sevai and sāttumurai, etc. festivities (vaibhavaṅgal) get conducted with distinction. The beauty of the location and the vicinity (sanniveṣam) of the sannidi are very very opportune. Nātamunigal's tiru-nakṣatiram is āni anuṣam. Āḷavandār's tiru-nakṣatiram is āḍi Uttarāḍam. The Vīrānam lake, with 74 sluices, is nearby.
4. ஸ்ரீமந்நாத முனிகளருளிச் செய்தது ந்யாயதத்வமென்கிற சாஸ்திரம் என்று முன்னோர்களால் குலாவப்படுகின்றது. அது இப்போது கிடைப்பதில்லையாதலால் லுப்தம் என்று நிச்சயிக்கலாயிற்று. ஆகவே ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஆசார்யச்ரேணியில் முதன்மையாக க்ரந்தமருளிச் செய்தவர் ஆளவந்தார் என்றே இப்போது நாம் சொல்ல வேண்டும். இம்மஹாசார்யர்களுடைய க்ரந்தங்களில் ஸித்தித்ரய ஆகமப்ரமாண்யாதிகள் அதிப்ரெளட க்ரந்தங்கள். ஸ்தோத்ரரத்னமும் கீதார்த்த ஸங்க்ரஹமும் அமுதிலுமினியவை. ஸ்தோத்ரரத்னத்திற்கு தனியனிட்டவர்கள் “ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ர்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம், ஸ்தோத்ரயாமாஸ” என்றது மிகவும் ஆழ்ந்து பேசியது. இதில் த்ரயந்தார்த்த சப்தத்தாலே உபய வேதாந்தமும் ஸங்க்ருஹீதம். ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தம் சிறுபான்மையும், த்ராவிட வேதாந்தார்த்தம் பெரும்பான்மையும் அமையப் பெற்றது ஸ்தோத்ரரத்னம். அதிலிருந்து பல விசேஷார்தங்களை மேலே பலவார்த்தைகளில் விவரிப்போம்.
4. It is held among leaders that Śriman Nātamunigal authored a sāstram called ñyāyatatvam. As it is not found today, it is determined as lost. Therefore, in Śri Vaiṣṇava sampradāyam, we must say that among the group of ācāryārs, Āḷavandār is the first to author a book. Among the books of this great ācāryān, Siddi Trayam, Āagama Prāmāṇyam, etc are the mightiest. Stotra Ratnam and Gītārtasaṅgraham are sweeter than nectar. After dwelling deep in Stotra Ratnam, the authors of its Taniyan said 'svādayanniha sarvaeṣām trayyantārttam sudurgraham, stotrayāmāsa'. In this 'trayyantārtta' sabdam takes in well both vedāntams (ubhaya vedāntam). Stotra Ratnam has in it the meanings of Sanskrit vedāntam to a minor extent and the meaning of drāviḍa vedāntam to a major extent. Ahead, we will elaborate on several special points from it.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
{phocadocumentation view=navigation|type=t}