150px banner3

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 535
A+ A A-

Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal - 4

{phocadocumentation view=navigation|type=mpcn}
ஸ்ரீ:
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
Thenkalai.JPG
 
உபந்யாஸ ஹஸ்த பூஷணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்

Sri. U. Ve. Prathivādi Bhayankaram Annaṅgarāchāryār Swāmy’s Upanyāsams
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal
 
நமஸகார ஆவ்ருத்தியைப் பற்றி
8. தென்னாசார்ய ஸம்ப்ரதாயஸ்தர்கள் ஒரு தடவை நமஸ்காரம் செய்வதென்றும் பிறர் பலதடவை நஸ்காரம் செய்வதென்றும் காண்கின்றது. பகவானை நமஸ்கரிப்பதென்பது மிகச் சிறந்ததொரு காரியமே. இதனை ஒரு தடவைக்குப் பல தடவையாகச் செய்தால் நல்லதல்லவென்று யாரேனும் நினைக்க முடியுமோ? நமஸ்கரிப்பவனுடைய கரணக்ராமமும் க்ருதார்த்தமாய், நமஸ்கரிக்கப்படுபவனான எம்பெருமானுடைய திருவுள்ளமும் ஸுப்ரஸந்நமாவதற்கு உறுப்பான காரியமன்றோ இது? அப்படியிருக்க, ஒரு தடவைதான் நமஸ்காரம் செய்ய வேணுமென்று ஒரு விரதமாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஒவ்வொரு விவேகிக்கும் இந்த சங்கை தோன்றும். இங்குத் தென்னாசார்யர்களின் திருவுள்ளம் கேண்மின், நம்மைப் பார்தால் நாம் எத்தனை தடவை நமஸ்கரித்தாலும் போராதது. எம்பெருமானைப் பார்த்தால் ஒரு தடவை நமஸ்கரிப்பதும் மிகையாகும். அப்பெருமான் கீதை முதலியவற்றில் தன்னை அல்ப ஸந்துஷ்டனாகச் சொல்லிக் கொள்ளுகிறான். “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” இத்யாதிகள் அவனுடைய அமுத மொழிகளாகக் காண்கின்றன. தேவதாந்தரங்கள் மிகவும் ச்ரமப்பட்டு ஆராதிக்கபட வேண்டியவையென்றும் , எம்பெருமான் ஆராதனைக்கு எளியவன் என்றும் ப்ரஸித்தம். ஆழ்வார்கள் அவனுடைய பெருமையைப் பேசுமிடத்து “தொழுது மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு எழுதுமென்னுமிது மிகையாதலின்” என்றும், “தொழக் கருதுவதே துணிவது சூதே’ என்றும் இப்புடைகளிலே அருளிச் செய்கிறார்கள். “பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம” என்கிற உபநிஷத் வாக்யத்திற்கு “தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேம” என்று அந்வயம் காட்டி “நம:” என்று வாயினாற் சொல்லுவதும் எம்பெருமான் திருவுள்ளத்தாலே மிகக் கனத்ததாகும்” என்று நம் பூர்வர்கள் அர்த்தம் செய்தருளுகிறார்கள். பட்டர் “அஞ்ஜலி பரம் வஹதே” என்கிறார். நாம் ஒரு அஞ்ஜலி செய்துவிட்டாலும் அது அத்தலைக்குப் பெரிய பளுவாகத் தோன்றுமென்பதை நன்கு காட்டுகின்றார். ஆகவே ஸ்வாரதனனான எம்பெருமான் முன்னிலையில் நாம் பலகால் விழுந்தெழுந்தால் அவன் திருவுள்ளம் என்னகுமோ? “நம்மையும் தேவதாந்தரங்களைப் போலே நினைத்துவிட்டார்கள் போலும்” என்று அவன் திருவுள்ளம் புண்படலாகுமோ என்னவோவென்று அஞ்சி “ஆராதனைக் கெளியன்” என்கிற அவனுடைய பெருமைக்குக் குறைவு வாராதபடி நடந்துகொள்வோமென்றே நமஸ்காரத்தில் ஆவ்ருத்தி ஸஹிக்கப்படவில்லை.

On Repeated Namaskaaram
8. We see that Theṉṉāchārya sampradāyastars do namaskāram once, while others do several times. Doing namaskāram of Bhagavān is certainly a great act. Can anyone think that it is wrong to do several namaskārams in place of one? Isn't this an act that satisfies the karanakrāmam of the person doing namaskāram, and one that pleases much the heart (tiruvuḷḷam) of Perumāḷ towards whom namaskāram is done? This being so, a learned observer (viveki) might wonder as to what is the need to hold with conviction that namasakāram is done only once? Listen to Theṉṉāchāryars position on this. Looking at us, any amount of namaskāram is insufficient. Looking at Perumāḷ , it is too much to do namaskāram  even once. Perumāḷ speaks of Himself in Gītai, etc. as one who is satisfied by small things. 'Patram puṣpam phalam toyam', etc. are seen as His words of amṛutam. It is well known that the demi-gods (devatāntarams , devatais other than Perumāḷ) are hard to please (ie. hard to do āradanam to), and Perumāḷ  is very easy to please (ie. very easy to do āradanam to). When talking about His greatness, āḻvārs use the expressions: 'toḻudu māmalar nīrsuḍar dūpaṅkonḍu eḻudumeṉṉumidu migaiyādalin' and 'toḻak karuduvade tunivadu sūde'. In doing vyākyānam of the upaniṣad vākyam 'bhūyiṣṭām te nama uktim videma', our pūrvācāryārs show anvayam (ie. how the words should be rearranged to make sense of the vākyam) as 'te 'bhūyiṣṭām nama uktim videma', and explain that even oral utterance of 'namaḥ' weighs very heavy in Perumāḷ's tiruvuḷḷam. Bhaṭṭar says: añjali bharam vahate. He shows clearly that even if we do one añjali (namaskāram ), it will feel like a big load to the other side (ie. to Perumāḷ 's side). Therefore, what might happen to the tiruvuḷḷam of the svatantra (self-dependent) Perumāḷ , if we fall and rise several times in front of him? It is only fearing that His tiruvuḷḷam might be hurt as 'may be they thought me to be like  demi-gods', and so as to act without causing reduction to his greatness as 'ārādanaik keḷiyan', that repeated namaskāram is not tolerated.

 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
 
{phocadocumentation view=navigation|type=t}

 

Rate this item
(0 votes)

Popular Downloads

coming soon...

Quick Links

coming soon

Vedics Foundation

Vedics USA

42991 Center St,

South Riding, VA 20152-2037


Vedics India

Flat 46/4, Athri apartments,
Opp to Triplicane fund Kalyana mandapam
Singarachari street,
Triplicane
Chennai -5

Follow Vedics

Copyright © Vedics. All rights reserved