150px banner3

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 535
A+ A A-
Theṉṉāchārya Sampradāyam

Theṉṉāchārya Sampradāyam (4)

{phocadocumentation view=navigation|type=mpcn}
ஸ்ரீ:
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
Thenkalai.JPG
 
உபந்யாஸ ஹஸ்த பூஷணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்

Sri. U. Ve. Prathivādi Bhayankaram Annaṅgarāchāryār Swāmy’s Upanyāsams
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal
 
நமஸகார ஆவ்ருத்தியைப் பற்றி
8. தென்னாசார்ய ஸம்ப்ரதாயஸ்தர்கள் ஒரு தடவை நமஸ்காரம் செய்வதென்றும் பிறர் பலதடவை நஸ்காரம் செய்வதென்றும் காண்கின்றது. பகவானை நமஸ்கரிப்பதென்பது மிகச் சிறந்ததொரு காரியமே. இதனை ஒரு தடவைக்குப் பல தடவையாகச் செய்தால் நல்லதல்லவென்று யாரேனும் நினைக்க முடியுமோ? நமஸ்கரிப்பவனுடைய கரணக்ராமமும் க்ருதார்த்தமாய், நமஸ்கரிக்கப்படுபவனான எம்பெருமானுடைய திருவுள்ளமும் ஸுப்ரஸந்நமாவதற்கு உறுப்பான காரியமன்றோ இது? அப்படியிருக்க, ஒரு தடவைதான் நமஸ்காரம் செய்ய வேணுமென்று ஒரு விரதமாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஒவ்வொரு விவேகிக்கும் இந்த சங்கை தோன்றும். இங்குத் தென்னாசார்யர்களின் திருவுள்ளம் கேண்மின், நம்மைப் பார்தால் நாம் எத்தனை தடவை நமஸ்கரித்தாலும் போராதது. எம்பெருமானைப் பார்த்தால் ஒரு தடவை நமஸ்கரிப்பதும் மிகையாகும். அப்பெருமான் கீதை முதலியவற்றில் தன்னை அல்ப ஸந்துஷ்டனாகச் சொல்லிக் கொள்ளுகிறான். “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” இத்யாதிகள் அவனுடைய அமுத மொழிகளாகக் காண்கின்றன. தேவதாந்தரங்கள் மிகவும் ச்ரமப்பட்டு ஆராதிக்கபட வேண்டியவையென்றும் , எம்பெருமான் ஆராதனைக்கு எளியவன் என்றும் ப்ரஸித்தம். ஆழ்வார்கள் அவனுடைய பெருமையைப் பேசுமிடத்து “தொழுது மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு எழுதுமென்னுமிது மிகையாதலின்” என்றும், “தொழக் கருதுவதே துணிவது சூதே’ என்றும் இப்புடைகளிலே அருளிச் செய்கிறார்கள். “பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம” என்கிற உபநிஷத் வாக்யத்திற்கு “தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேம” என்று அந்வயம் காட்டி “நம:” என்று வாயினாற் சொல்லுவதும் எம்பெருமான் திருவுள்ளத்தாலே மிகக் கனத்ததாகும்” என்று நம் பூர்வர்கள் அர்த்தம் செய்தருளுகிறார்கள். பட்டர் “அஞ்ஜலி பரம் வஹதே” என்கிறார். நாம் ஒரு அஞ்ஜலி செய்துவிட்டாலும் அது அத்தலைக்குப் பெரிய பளுவாகத் தோன்றுமென்பதை நன்கு காட்டுகின்றார். ஆகவே ஸ்வாரதனனான எம்பெருமான் முன்னிலையில் நாம் பலகால் விழுந்தெழுந்தால் அவன் திருவுள்ளம் என்னகுமோ? “நம்மையும் தேவதாந்தரங்களைப் போலே நினைத்துவிட்டார்கள் போலும்” என்று அவன் திருவுள்ளம் புண்படலாகுமோ என்னவோவென்று அஞ்சி “ஆராதனைக் கெளியன்” என்கிற அவனுடைய பெருமைக்குக் குறைவு வாராதபடி நடந்துகொள்வோமென்றே நமஸ்காரத்தில் ஆவ்ருத்தி ஸஹிக்கப்படவில்லை.

On Repeated Namaskaaram
8. We see that Theṉṉāchārya sampradāyastars do namaskāram once, while others do several times. Doing namaskāram of Bhagavān is certainly a great act. Can anyone think that it is wrong to do several namaskārams in place of one? Isn't this an act that satisfies the karanakrāmam of the person doing namaskāram, and one that pleases much the heart (tiruvuḷḷam) of Perumāḷ towards whom namaskāram is done? This being so, a learned observer (viveki) might wonder as to what is the need to hold with conviction that namasakāram is done only once? Listen to Theṉṉāchāryars position on this. Looking at us, any amount of namaskāram is insufficient. Looking at Perumāḷ , it is too much to do namaskāram  even once. Perumāḷ speaks of Himself in Gītai, etc. as one who is satisfied by small things. 'Patram puṣpam phalam toyam', etc. are seen as His words of amṛutam. It is well known that the demi-gods (devatāntarams , devatais other than Perumāḷ) are hard to please (ie. hard to do āradanam to), and Perumāḷ  is very easy to please (ie. very easy to do āradanam to). When talking about His greatness, āḻvārs use the expressions: 'toḻudu māmalar nīrsuḍar dūpaṅkonḍu eḻudumeṉṉumidu migaiyādalin' and 'toḻak karuduvade tunivadu sūde'. In doing vyākyānam of the upaniṣad vākyam 'bhūyiṣṭām te nama uktim videma', our pūrvācāryārs show anvayam (ie. how the words should be rearranged to make sense of the vākyam) as 'te 'bhūyiṣṭām nama uktim videma', and explain that even oral utterance of 'namaḥ' weighs very heavy in Perumāḷ's tiruvuḷḷam. Bhaṭṭar says: añjali bharam vahate. He shows clearly that even if we do one añjali (namaskāram ), it will feel like a big load to the other side (ie. to Perumāḷ 's side). Therefore, what might happen to the tiruvuḷḷam of the svatantra (self-dependent) Perumāḷ , if we fall and rise several times in front of him? It is only fearing that His tiruvuḷḷam might be hurt as 'may be they thought me to be like  demi-gods', and so as to act without causing reduction to his greatness as 'ārādanaik keḷiyan', that repeated namaskāram is not tolerated.

 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
 
{phocadocumentation view=navigation|type=t}

 

Read more...
{phocadocumentation view=navigation|type=mpcn}
ஸ்ரீ:
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
Thenkalai.JPG
 
உபந்யாஸ ஹஸ்த பூஷணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்

Sri. U. Ve. Prathivādi Bhayankaram Annaṅgarāchāryār Swāmy’s Upanyāsams
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal

In the essay, 'Āḻvārgal Pugaḻnda Kaṇṇaṉ', that we published earlier, a few elders informed that there is no mention of Kaṇṇaṉ having spoken Gītai, and wrote that "may be this confirms the argument that Gītai is of modern making". Here is the rebuttal to them. So far, we have not heard the argument that Gītai is of modern making. It is inappropriate for believers (āstikargal) to go with that argument. Āḻvārs have done praises on Gītai in several places in Divyaprabandam. It is worth reading Maṇavāḷa Māmunigal's vyākyānam of the Āchārya Hrudhya choornikai: bhagavan ñyānavidi paṇivagaiyenṛu ivvaṅgīkārattāle adukku (Gītaikku) utkarṣam. In 'Āḻvārgal Pugaḻnda Kaṇṇaṉ', we have even cited the Tiruvāimoḻi pāsuram: aṛiviṉāl kuṛaivillā agal ñyālattavaraṛiya, neṛiyellām eḍuttuṛaitta niṛai ñyānat torumūrtti. Tirumaḻisaippirān has most explicitly spoken of Gītai in Nānmugan Tiruvandādi as: āyan tuvaraikkoanāi ninṛa māyan anṛoadiya vākku.

A key to Viśiṣtādvaita siddāntam and a key to Theṉṉāchārya siddāntam are important to know. 'Sarīra-ātma bhāvam' is the key to Viśiṣtādvaita siddāntam. It is a great policy that, all upaniṣad vākyams resolve easily to the vedānti who properly learns the fact that 'sarvesvaran has all cetanams (entities that have ñyānam) and acetanams (entities that cannot have ñyānam) as his sarīram'. By the Rahsya Traya Sāra slokam, 'yadyatam yatisārvabhoumagatitam', Vedāntāchāryar declares that in the presence of a vidvān who knows this well, people of other philosophies will definitely get defeated.

முன்னுரை முற்றிற்று
 
One should know that the essence of Theṉṉāchārya siddāntam is this: no matter what, all focus is only on Perumāḷ's greatness. This is the significance of this sampradāyam. In other sampradāyams, one gets to see predominance only to cetanan and his actions. On the contrary, in this sampradāyam, one gets to see total predominance only to Sarvesvaran and His thoughts. One can get well clarified of this through a very popular anuṣṭānam. Listen, here it is.
 
End of Foreword
 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
 
{phocadocumentation view=navigation|type=t}

 

Read more...
{phocadocumentation view=navigation|type=mpcn}
ஸ்ரீ:
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
Thenkalai.JPG

உபந்யாஸ ஹஸ்த பூஷணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்
 
Sri. U. Ve. Prathivādi Bhayankaram Annaṅgarāchāryār Swāmy’s Upanyāsams
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal
k
3.  ஸ்ரீமந் நாத முனிகளுக்கும் ஆளவந்தார்க்கும் திவ்ய தேசமெங்கும் திரு நக்ஷத்ரோத்ஸவ பரிபாலனம் நடைபெற்றாலும் திருவவதாரஸ்தலமான காட்டு மன்னார் ஸன்னிதியிலே நடைபெறுவது வெகு விசேஷம். தினப்படி காலை மாலையிரு வேளையிலும் திருவீதிப் புறப்பாடு, பகலில் அலங்காரத் திருமஞ்சனம் ஸேவை சாத்து முறைகள், லோகோத்தாரனமான ததீயாராதனம், இரவு திருவீதிப் புறப்பாட்டின் பிறகு திருவாய்மொழி ஸேவை சாத்துமுறை இத்யாதி வைபவங்கள் விலக்ஷணமாக நடந்தேறுகின்றன. தலத்தின் அழகும் ஸந்நிதியின் ஸந்நிவேசமும் மிகமிக வாய்ப்பானது. நாதமுனிகள் திருநக்ஷத்திரம் ஆனு அனுடம். ஆளவந்தாரின் திருநக்ஷத்திரம் ஆடி உத்தராடம். எழுபத்து நான்கு மதகுகளையுடைய வீராணத்தேரி இத்தலத்தின் அருகிலேயே.
 
3.  Even though the tiru-nakṣatirams of Śriman Nātamunigal and Āḷavandār are celebrated everywhere in divyadesams, the celebrations happening in their place of birth, Kāṭṭu Maṉṉār saṉṉidi, is very special. Daily procession in the streets around the temple (tiruvīdip purappāḍu) in the morning and evening, day-time alaṅgāra sevai and sāttumurai, prasādam for Bhāgavatās (tadīyārādanam), Tiruvāimoḻi sevai and sāttumurai, etc. festivities (vaibhavaṅgal) get conducted with distinction. The beauty of the location and the vicinity (sanniveṣam) of the sannidi are very very opportune. Nātamunigal's tiru-nakṣatiram is āni anuṣam. Āḷavandār's tiru-nakṣatiram is āḍi Uttarāḍam. The Vīrānam lake, with 74 sluices, is nearby.
 
4.  ஸ்ரீமந்நாத முனிகளருளிச் செய்தது ந்யாயதத்வமென்கிற சாஸ்திரம் என்று முன்னோர்களால் குலாவப்படுகின்றது. அது இப்போது கிடைப்பதில்லையாதலால் லுப்தம் என்று நிச்சயிக்கலாயிற்று. ஆகவே ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஆசார்யச்ரேணியில் முதன்மையாக க்ரந்தமருளிச் செய்தவர் ஆளவந்தார் என்றே இப்போது நாம் சொல்ல வேண்டும். இம்மஹாசார்யர்களுடைய க்ரந்தங்களில் ஸித்தித்ரய ஆகமப்ரமாண்யாதிகள் அதிப்ரெளட க்ரந்தங்கள். ஸ்தோத்ரரத்னமும் கீதார்த்த ஸங்க்ரஹமும் அமுதிலுமினியவை. ஸ்தோத்ரரத்னத்திற்கு தனியனிட்டவர்கள் “ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ர்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம், ஸ்தோத்ரயாமாஸ” என்றது மிகவும் ஆழ்ந்து பேசியது. இதில் த்ரயந்தார்த்த சப்தத்தாலே உபய வேதாந்தமும் ஸங்க்ருஹீதம். ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தம் சிறுபான்மையும், த்ராவிட வேதாந்தார்த்தம் பெரும்பான்மையும் அமையப் பெற்றது ஸ்தோத்ரரத்னம். அதிலிருந்து பல விசேஷார்தங்களை மேலே பலவார்த்தைகளில் விவரிப்போம்.
 
4.  It is held among leaders that Śriman Nātamunigal authored a sāstram called ñyāyatatvam. As it is not found today, it is determined as lost. Therefore, in Śri Vaiṣṇava sampradāyam, we must say that among the group of ācāryārs, Āḷavandār is the first to author a book. Among the books of this great ācāryān, Siddi Trayam, Āagama Prāmāṇyam, etc are the mightiest. Stotra Ratnam and Gītārtasaṅgraham are sweeter than nectar. After dwelling deep in Stotra Ratnam, the authors of its Taniyan said 'svādayanniha sarvaeṣām trayyantārttam sudurgraham, stotrayāmāsa'. In this 'trayyantārtta' sabdam takes in well both vedāntams (ubhaya vedāntam). Stotra Ratnam has in it the meanings of Sanskrit vedāntam to a minor extent and the meaning of drāviḍa vedāntam to a major extent. Ahead, we will elaborate on several special points from it.

 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
 
{phocadocumentation view=navigation|type=t}
Read more...
{phocadocumentation view=navigation|type=mpcn}
ஸ்ரீ:
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
Thenkalai.JPG

உபந்யாஸ ஹஸ்த பூஷணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் மாஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சொற்பொழிவுகள்
தென்னாசார்ய சம்ப்ரதாய நுட்பங்கள்

Sri. U. Ve. Prathivādi Bhayankaram Annaṅgarāchāryār Swāmy’s Upanyāsams
Theṉṉāchārya Sampradāya Nuṭpaṅgal

முன்னுரை
1.  நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவ தரிசனம் ஆழ்வார்களாலும் ஆசாரியர்களாலும் மேன்மை பெற்று விளங்குகின்றது. ஆழ்வார்களுள் நம்மாழ்வார் ப்ராதாந்யம் பெற்றது போல ஆச்சரியர்களுள் ஸ்ரீமந்நாதமுனிகள் ப்ராதாந்யம் பெற்றவர். பகவத்ராமாநுஜ தர்சனமென்றும் எம்பெருமானார் தர்சனமென்றும் நம்பெருமாள் நியமனத்தாலே வழங்கும்படியான பெருமை பெற்ற ஸ்வாமி எம்பெருமானாருடைய ப்ராதந்யத்தையோ, அவருடைய அபராவதார பூதரான மணவாள மாமுனுகளின் ப்ராதந்யத்தையோ இதனால் அபலபித்ததாக ஆகாது. “நாதோப ஜ்ஞம் ப்ரவ்ருத்தம்…. இதமகிலதம: கர்சனம் தர்சனம் ந:” என்று வேதாந்தவாசிரியர் பணித்தபடி ஸ்ரீமந்நாதமுனிகளையே தலைவராகக் கொண்டது நம் தரிசனம். அவர் திருவவதரித்து மஹாப்ரயாஸங்கள் கொள்ளவில்லை யென்றால் பின்னை ஆளவந்தார் எம்பெருமானார் போல்வாருடைய திருவவதாரமும் அவ்வளவு பயன் பட்டிராதென்றே சொல்ல வேண்டிற்றாகும்.

Foreword
1.  Our Śrivaiṣṇava dharsanam shines with greatness because of Āḻvārs and āchāryārs. Nammāḻvār gets prominence among āḻvārs and, likewise, Śriman Nāthamunigal gets prominence among āchāryārs. This does not amount to denying the prominence of: either Swāmy Emberumānār, who has the greatness that by Namperumāl’s order, the dharṣanam gets addressed as Bhagavad Rāmānujā Dharṣanam and Emperumānār Dharshanam or his later avathāram, Manavāḷa Māmunigal. As Vedhāntāchāryār said ‘nāthopagnyam pravruththam… idhamakhilathamah karṣanam dharṣanam naḥ’, our dharshanam has only Śriman Nāthamunigal as the head. Had he not done thiru-avathāram and taken great efforts, then one has to say that the thiru-avathārams of later āchāryans like Āalavandār and Emperumānār would not have been as productive.

நாதமுனிகள்

2.  நாதமுனிகள் தம் திருச்செவியில் யாத்ருச்சிகமாக விழுந்த “ஆராவமுதே யடியேனுடலம்” என்று தொடங்கும் திருவாய்மொழிப் பதிகமொன்றையே கொண்டு, இங்கனே ஆயிரம் பாசுரம் திருவவதரித்திருப்பதாக முன்னமறிந்து, பிறகு நாலாயிரம் பாசுரம் திருவவதரித்து இருப்பதாகவும் அறிந்து, நேரே ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி, ஆங்கே தமக்கு ஸதுபாயம் கூறினவரும் ஸ்ரீ மதுரகவி வம்சத்தவருமான ஒரு பெரியார் உபதேசித்தருள, கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்ய பிரபந்தத்தைத் திருப்புளியாழ்வார் அடியிலே நியமபூர்வமாகப் பன்னீராயிரமுறை ஜபித்து நம்மாழ்வாரை யோக தசையிலே ஸாஷாத்கரிக்கப்பெற்று “நாதனுக்கு நாலாயிரமுரைத்தான் வாழியே” என வழங்கும் நம்மாழ்வாருடைய வாழி திருநாமத்தின்படி அவர் பக்கலிலே நாலாயிர திவ்யபிரபந்தங்களைப் பெற்று, தேவகான குசலர்களும் தம்முடைய பாகிநேயர்களுமான மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்னுமிருவர் மூலமாக அத்திவ்ய பிரபந்தங்களை இந்நிலவுலகில் பரவச் செய்தருளின பெருமை நாதமுனிகளுக்கு அஸாதரணமாகவன்றோ விளைந்தது. இவ்வேற்றத்தை உட்கொண்டன்றோ மணவாள மாமுனிகள் உபதேசரத்தின மாலையில்  “அருள் பெற்ற நாதமுனி” என்றருளிச் செய்தது.

Nātamunigal
2.  Unique greatness grew to Nāthamunigal for: taking just the one Thiruvāimoḻi decade that begins as 'ārāvamude adiyenudalam…' that accidentally fell in his ears, learning first that there are a thousand pāsurams like this that have done thiru-avathāram, then learning also that there are four thousand paasurams like this that have done thiru-avathāram, then going straight to Āḻvār Thirunagari, then following the means, suggested by a descendant of Śri Madhurakavi Āḻvār, of chanting 'kaṇṇiṇun siruttāmbu' divyaprabandham 12,000 times under the sacred tamarind tree (called thiruppuḷi āḻvār), then visualizing Naṃmāḻvār in yogic state, and getting from him the four thousand divyaprabandams as per Naṃmāḻvār's Vāḻi Thirunāmam 'nātanukku nālāyiram uraittān vāḻiye', and then spreading those divyaprabandams in this world through his nephews and devagāna kuchalars, Melaiyagattāḻvār and Keeḻaiyagattāḻvār. Isn't this the greatness that Maṇvāḷa Māmunigal had in mind when he said 'arul petra nātamuni' in Upadesa Rattinamālai.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
 
{phocadocumentation view=navigation|type=t}

 
Read more...

Popular Downloads

coming soon...

Quick Links

coming soon

Vedics Foundation

Vedics USA

42991 Center St,

South Riding, VA 20152-2037


Vedics India

Flat 46/4, Athri apartments,
Opp to Triplicane fund Kalyana mandapam
Singarachari street,
Triplicane
Chennai -5

Follow Vedics

Copyright © Vedics. All rights reserved