Logo
Print this page

Ramanusa Nootrandadhi Thaniyan - 1

இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்.

வேதப்பிரான் பட்டர் அருளிச்செய்தவை.

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.

Read More

முன்னை வினை முன்னே செய்த பாபங்களெல்லாம்
அகல ஒழிவதற்காக
மூங்கில் குடி அமுதன் “மூங்கிற்குடி” என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் பொன்போல் அழகிய பாதாரவிந்தங்களிரண்டையும்
என்னுடைய சென்னிக்கு எனது தலைக்கு
அணி ஆக ஆபரணமாக
சேர்த்தினேன்
பொருந்தவைத்துக் கொண்டேன்
யான்
இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன்
தென் புலத்தார்க்கு தெற்கு திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு
என்னுக்கு எதுக்காக
கடவு உடையேன்
ப்ராப்தி யுடையேன்?


மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை; என்றாயிற்று.
“முன்னை வினையகலச் சேர்த்தினேன்” என் இயையும். [மூங்கிற்குடி] வேயர்குலம், ஆஸூரிகுலம், கூரகுலம் என்பன போல மூங்கிற்குடி யென்று ஒரு குலமுண்டாம். கமலப் போது = தாமரைப்பூ, அணி – ஆபரணம். சேர்த்தினேன் = சேர்த்தேன் என்றபடி: இன்--சாரியை.
என்னுக்கு+கடவுடையேன்  = என்னுக்கடவுடையேன்; (கடைக்குறை) கெடுதல் விகாரப் புணர்ச்சி. என்னுக்கு = எதுக்காக என்கை; “என்னுக்கவனை விட்டிங்கு வந்தாய்” என்றார் குலசேகரப் பெருமாளும். [கடவுடையேன்.] கடவு = ப்ராப்தி; அதாவது – உரிமை.

Rate this item
(0 votes)

Latest from

Copyright © Vedics. All rights reserved