Logo
Print this page

Ramanusa Nootrandadhi Thaniyan - 3

இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்


சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

 

Read More

 

அறு சமயம் அப்ராமாணிகங்களான அறுமதங்களையும்
வெல்லும் கண்டித்தருளின
பரம ஆரியரான
இராமானுச எம்பெருமானாரே!
உனது அடி போதுக்கு தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே
தொண்டு செய்யும் வாசிக கைங்கர்யம் பண்ணுகிற
நல் அன்பர் பரம பக்தர்கள்
சொல்லின் தொகை கொண்டு சப்த ராசிகளைக் கொண்டு
ஏத்தும் துதிக்கிற
உன் நாமம் எல்லாம் தேவரீருடைய திருநாமங்களெல்லாம்
என்தன் நாவிலுள்ளே எனது நாவிலே
அல்லும் பகலும்
அஹோராத்ரமும்
அமரும்படி பொருந்தியிருக்கும் படி
நல்கு க்ருபைசெய்தருள வேணும்
இதுவே என் விண்ணப்பம் இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம்.


[இம்மூன்று தனியன்களே ஸகல திவ்ய தேசங்களிலும் வழங்கு மவை; மற்றொரு தனியன் மேனாட்டில் அநுஸந்திக்கப் படுகிறதாம்;] 

Rate this item
(0 votes)

Latest from

Copyright © Vedics. All rights reserved